நூற்றுக்கணக்கான விவசாயிகள் இருந்ததில் வெறும் 23பேர் மட்டும்தான் நேரில் கண்ட சாட்சிகளா?

சில நாட்கள் முன்பு உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் வரிசையாக வாகனம் ஏற்றி கொல்லப்பட்டனர். இதில் அமைச்சரின் மகன் இருந்தார் என்பதும் ,அந்த காரில் பாதுகாப்பு துறை அதிகாரியும் இருந்தார் என்பதும் வெளியான வீடியோவில் தெரியவந்தது.

அதன் பின்னர் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் காரை ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் 16 எதிரிகளை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள 16 எதிரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சால்வே தகவல் அளித்தார். உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச மாநில சார்பில் ஆஜராகியுள்ளார் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே.superme court

உத்தரபிரதேச அரசு சார்பில் துணை தலைமை வழக்கறிஞர் கரிமா பிரசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். மொத்தம் உள்ள 68 சாட்சிகளில் 30 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் சால்வே தகவல் அளித்தார்.

லக்கிம்பூர் பகுதியில் காரை ஏற்றி விவசாயிகள் நான்கு பேர் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த 23 சாட்சிகள் உள்ளனர் என்றும் சால்வே கூறினார். அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணியில் பங்கேற்ற நிலையில் இருபத்தி மூன்று பேர் மட்டும் தான் நேரில் பார்த்த சாட்சிகளா? என்ற கேள்வி கேட்டுள்ளார்.

விவசாயிகள் மீது ஏற்றப்பட்ட காரில் வந்தவர்களை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளதாகவும் வழக்கறிஞர் சால்வே பதிலளித்தார். லக்கிம்பூர் நிகழ்வு தொடர்பாக ஏராளமான வீடியோ பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்  தகவல் அளித்தார்.

விவசாயிகள் பேரணி தனியே வீடியோ எடுத்தவரின் பதிவும் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் சால்வே கூறியுள்ளார். வீடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டு அது வழக்கில் ஆதாரமாக சேர்க்கப்படும் என்றும் தலைமை வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment