திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி! மேற்கு வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள்;

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின் பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் நேற்றைய தினம் முடிவில் இரண்டரை லட்சத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக நம் தமிழக அரசு நாளையதினம் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இரவு நேர ஊரடங்கு நம் தமிழகத்தில்தான் அமல் உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்குவங்கத்தில் திருமண நிகழ்ச்சிகளில் இனி 200 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. திருமணம் மற்றும் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 50 சதவீதத்திற்கு பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் அதற்கு மேல் அனுமதி கிடையாது என்றும் கூறியுள்ளது.

திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கொரோனா விதிகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த மேற்குவங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மேற்கூறிய புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி  31-ஆம் தேதி வரை கொரோனா விதிகள் நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment