டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் 12 மாநில அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி!
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டம் ஜனவரி 23-ஆம் தேதி முதலே தொடங்கிவிடும் ஆனால் 2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனவரி 23ஆம் தேதி முதலே குடியரசு தின கொண்டாட்ட விழா நடைபெறும் என்று அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் குடியரசு தின அலங்கார ஊர்தி வாகன அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி மேற்கு வங்கம், கேரளம் போன்ற பல மாநிலங்களின் அலங்கார ஊர்தி வாகனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த ஆண்டு வெறும் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்தி வாகனங்கள் மட்டுமே தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் 12 மாநிலங் அலங்கார ஊர்தி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
12 மாநில அலங்கார ஊர்திகள், ஒன்பது ஒன்றிய அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே இந்த ஆண்டு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. நேரத்தை கருத்தில் கொண்டு 12 மாநில அலங்கார ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
