ஆன்லைன் ஷாப்பிங் அதிர்ச்சி; செல்போன் ஆர்டர் செய்வதவருக்கு டெலிவரி கிடைத்த சிமெண்ட் கல்!

உதகை அருகே ஆன்லைனில் செல்போனை வாங்கிய நபருக்கு செல்போனுக்கு பதிலாக சிமெண்ட் கல் டெலிவரி கிடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகை கால சிறப்பு ஆஃபர்களை நம்பி ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் ஏராளமான நபர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்த பொருட்களுக்குப் பதிலாக சம்பந்தமே இல்லாத பொருட்கள் பார்சலில் வந்துள்ள சம்பவங்கள் ஏராளம். இந்நிலையில் ஊட்டியைச் சேர்ந்த நபருக்கு ஆன்லைன் பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்த மோதிலால் லட்சுமணன் என்பவர் தனது மனைவிக்காக ஆன்லைன் மூலம் சுமார் 1000 ரூபாய் மதிப்புள்ள ஒரு செல்போனை கடந்த 1-ம் தேதி ஆர்டர் செய்துள்ளார். அவ்வாறு ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போன் பார்சல் நேற்று வீட்டுக்கு வந்து உள்ளது.

அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்த போது செல்போனுக்கு பதிலாக சிமெண்ட் கல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து சம்பந்தபட்ட ஆன்லைன் நிறுவனத்திற்கு புகார் அளிக்க மோதிலால் லட்சுமணன் முடுவு செய்துள்ளார்.

ஆன்லைனில் செல்போனுக்கு பதிலாக கல் வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment