Connect with us

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு? பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு! குழப்பத்தில் மாணவர்கள்!!

college9

தமிழகம்

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு? பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு! குழப்பத்தில் மாணவர்கள்!!

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு? பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு! குழப்பத்தில் மாணவர்கள்!!

இன்று காலை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

delhi schools reopen

அதன்படி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இருப்பினும் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. அதேவேளையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் பல்கலைக்கழகங்களுக்கு ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top