ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் கடும் எச்சரிக்கை..

விதிமுறைகளை கடைபிடிக்க தவறினால் தேர்வு ரத்து செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் குறித்து விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான பருவத்தேர்வுகள் அவரர் வீடுகளில் இருந்த படி மாணவர்கள் தேர்வுகள் எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான வினாதாள்கள் கணினி மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ள  பல்கலைகழகம் பதிவு எண் மற்றும் பாடகுறியீட்டு  எண்னை தவறாக பதிவு செய்தால் விடைத்தாள்கள் நிராகரிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தேர்வு முடிந்த ஒருமணி நேரத்திற்க்குள் விடைத்தாள்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment