Connect with us

ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுமா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை;

online gamee

தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுமா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை;

தற்போது நம் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் சூதாட்டங்களின் மூலமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நடந்து கொண்டே வருகிறது.

ஏன் என்றால் அவர்கள் பெருமளவு பணத்தினை அந்த ஆன்லைன் ரம்மியில் செலவழித்து பின்னர் தோல்வி அடைவதால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தற்கொலை முடிவுகளை எடுத்துக் கொள்கின்றனர்.

இதில் பலரின் குடும்பமும் கேள்விக்குறியாகி நிற்கிறது. எனவே தமிழகத்திலிருந்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களும் கோரிக்கைகளை வைத்துக் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு உள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பாக இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து கருத்து நடைபெற்ற நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் ஏற்றுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top