ஆன்லைன் ரம்மி! ஆளுநர் ஒப்புதலுக்கு கோரிக்கை – அமைச்சர் ரகுபதி!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இருப்பினும் ஆளுநர் மெளனம் காத்து வந்த நிலையில் அமைச்சர் ரகுபதி ஆளுநரிடம் ஒப்புதல் வழங்க நேரில் சந்தித்து பேசினார்.

நள்ளிரவில் பயங்கரம்! தீக்கிரையான இருசக்கர வாகனம்..!!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆன்லைன் சூதாட்டத்தினை ரத்து செய்வது குறித்து தமிழக ஆளுநரிடம் அரை மணி நேரம் விளக்கம் கொடுத்தாகவும், இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இந்நிலையில் ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்வதற்கான மசோதா பரிசீலனையில் இருப்பதால் விரைந்து முடிவெடுக்கப்படும் என கூறியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

அதிர்ச்சி! கர்ப்பிணி ஆசிரியர் மீது தாக்குதல்.. 22 மாணவர்கள் சஸ்பெண்ட்!!

தொடர்ந்து பேசிய அமைச்சர் பலரது செல்போன்களில் வெல்கம் போனஸ் ஆக 8 ஆயிரம் வழங்கப்படுவதை நம்பி பல பேர் 8 லட்சம் ரூபார் வரையில் இழந்துள்ளதாக கூறினார். அதே போல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.