ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – தமிழக அரசு விளக்கம்!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ரம்மி விளையாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 10 தேதி ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் களுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.

திருடிய வீட்டையே கொளுத்திய மர்ம நபர்கள்.! ராணிப்பேட்டையில் பரபரப்பு!!

இதன் காரணமாக ஆளுநர் மாளிகையில் இருந்து அந்த சட்ட மசோதா குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டிருந்தது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி என்பது திறமையில் அடிப்படையிலா? அல்லது அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலா? விளையாட்டுகள் அமைந்துள்ளது என்ற ஒரு கேள்வி எழுப்பட்டது.

அதே போல் ஆன்லைனில் எதிர்த்து விளையாடுவது நபர் அல்ல என்றும் கணினி என்பதால் இழப்புகளே அதிகம் என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் செய்த தவறு!! மன்னிப்பு கேட்ட நீதிபதி..!!

மேலும், தமிழக அரசின் இத்தகைய விளக்கத்தை பொறுத்தவரையில் ஆளுநரின் சட்டமசோதாவின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.