நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய சூதாட்டத்தில் பலபேர், பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இதனை தடுக்கும் விதத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து பொதுமக்கள் கருத்துக்களை கேட்க தொடங்கிய நிலையில், விரைவில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யப்படும் என கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். குறிப்பாக ஒன்றிய அரசுக்கு முன் மாதிரியாக இந்த சட்டம் அமையும் என கூறினார்.
இதற்காக மிக விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டுவரப்படுவதாக கூறியுள்ளார். அதே போல் நீட் தேர்வு மற்றும் துணைவேந்தர் சட்ட மசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், ஆளுநரின் பரிசீலனையில் இருக்கும் சூழலில், விரைவில் சட்ட மசோதாக்கள் குறித்து ஆளுநர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.