ஆன்லைன் ரம்மி! வடமாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஆன்லைனில் விளையாட்டுகளால் ஏற்படும் மரணங்கள் என்பது தொடர் கதையாகி வருகிறது. இத்தகைய விளையாட்டை ரத்து செய்ய அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலநந்தம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி பந்தனா மாஜி கண்வர் அஜய் மண்டல் ஆகியோர் தனியார் மில் ஒன்றில் வேலைப்பார்த்து வந்துள்ளார்.

விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையா?- சுகாதார இயக்ககம் விளக்கம்!

இதற்கிடையில் தம்பதியினர் இருவரும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சுமார் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மனவிரக்தியடைந்த பந்தனா மாஜி வீட்டில் கணவன் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கார்த்திகை மாதம் எதிரொலி: காசிமேட்டில் மீன்களின் விலை குறைவு!!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.