ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு

நவீன காலத்தில் ஆன்லைன் ரம்மி என்ற ரம்மி விளையாட்டு ஆன்லைனில் விளையாடப்படுகிறது. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழப்பவர்கள் ஏராளம்.

கடந்த சில வாரங்களில் மட்டும் சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் பணத்தை இழந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய சினிமா நடிகர்களே ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வருவது பலத்த கோபத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

காளிதாஸ் ஜெயராம், பரத், மனோபாலா, பிரேம்ஜி போன்றவர்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் சமூக வலைதள வாசிகள் இதுல பெரிய சோகம் என்னனா இந்த நடிகர்கள் எல்லாருக்குமே மூனு தலைமுறைக்கு சொத்து இருக்கு..ஆன்லைன் சூதாட்டத்தில் இந்த நடிகர்கள் விளையாடி பணத்தை இழந்தால் கூட இவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை என கூறி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment