Connect with us

ஆன்லைன் விளையாட்டு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

tamilnadu govt

தமிழகம்

ஆன்லைன் விளையாட்டு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனவே தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்க வேண்டும் என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய  அவசர சட்டம் இயற்றுவதற்கு தமிழக அரசு பரிந்துரை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, குழுவின் அறிக்கை என்பது அரசின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக கருத்துக்களை பெற்றோர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்,இளைய தலைமுறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து தமிழக அரசு கருத்துக்களை கேட்பதாக கூறப்பட்டுள்ளது.

அதன் படி, ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்துவது குறித்து மக்கள் [email protected] என்ற இணையதளம் மூலம் தங்களுடைய கருத்துக்களை பதிவிடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே போல் வருகின்ற 12ம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. இந்த கருத்துக்கள் மற்றும் குழுவின் கருத்துக்களை வைத்து தமிழக அரசு முடிவுகள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top