பல உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் முன்னணி நடிகர்கள் சமூக பொறுப்பின்றி நடிப்பது அவசியமா?

ஒரு காலத்தில் மரத்தடிகளில் சீட்டுக்கட்டு விளையாட்டை காசு வைத்து விளையாடினால் போலீஸ் வந்து பிடித்து விடும் என்ற அளவில் இருந்தது.

இதற்கு பயந்து கிராமங்களில் மறைந்து மறைந்து விளையாடுவர்.

தற்போதைய நவநாகரீகமான இந்த இண்டர்நெட் யுகத்தில் ரம்மி விளையாடுவது அதுவும் ஆன்லைனில் ரம்மி விளையாடுவது புகழ்பெற்று வருகிறது.

சமீபத்தில் கூட சென்னையை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்றதால் மனைவி குழந்தைகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்தார்.

ஆன்லைன் ரம்மியை கடந்த அதிமுக அரசில் சில நாட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஆன்லைன் ரம்மிக்கான தடை நீக்கப்பட்டது.

தமிழகத்தின் மூத்த  நடிகர்கள் முன்னணி நடிகர்கள் கூட கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாமல் ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

முன்னணி இயக்குனரான மனோபாலா கூட இது போல ஒரு ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போல சமூகத்துக்கு கேடாக இருக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என இயக்குனரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் உடனடியாக பணம் வந்ததும் அதற்கு அடிமையாகி போதை போல ஆன்லைன் ரம்மியை விளையாடிக்கொண்டே இருந்து பல லட்சத்தை இழந்து அதற்கு அடிமையாக மாறி தங்களது பணத்தையும் இழக்கின்றனர்.

இதனால் கடன் அதிகமாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment