ஆன்லைன் விளையாட்டு நிறுவனம்: ஒன்றிய அரசு அதிரடி!

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வரைவு விதிமுறைகளை வெளியிட்டது.

உயிர்கொல்லியாக மாறும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2021 இல் வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் ஆன்லைன் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன் படி, ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பு என்பது கட்டாயம் அவசியம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் மூலம் புகார்களை தெரிவிக்க முடியும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது.

மேலும், நிறுவனத்தின் முத்திரையை பார்த்தல், வெற்றிகளை நிர்ணயம் செய்தல், கட்டணங்கள் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் பயனர்களுக்குத் தெரிவிப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.