ஆன்லைன் சூதாட்டம்: மாநில உரிமை பறிப்பு?

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கான விதிகளை வகுப்பது உள்ளிட்டவைகளை கவனிப்பதற்கான அமைப்பாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஆன்லைன் உள்ளிட்ட ரம்மி சூதாட்டத்திற்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழகம் தனது எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது.

இந்தநிலையில் ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில் ஆன்லைன் விளையாட்டுக்கள் சார்பில் அனைத்து விதிகளும் வகுக்கப்படும் எனவும், ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணிக்கும் நோடல் ஏஜேன்சியாக அமைச்சகம் செயல்படும் என ஒன்றி அரசு அறிவித்துள்ளது.

இத்தகைய அறிவிப்புக்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதனால் மாநில அரசுகளின் மூலம் ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யும் வாய்ப்பு இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு அதிகாரிகளை ஆளுநர் சந்தித்தாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.