எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்தான் அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக மொபைல் போனில் ஆன்லைன் விளையாட்டுகளின் விளம்பரம் அதிகமாகவே காணப்படுகிறது. இதற்கு பலரும் அடிமைகளாக உள்ளனர். ஏனென்றால் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் ஒருகட்டத்தில் ஆன்லைன் சூதாட்டமாக மாறி பணம் இழப்பிற்கு கொண்டு செல்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் இதில் விளையாடும் நபர்கள் பல லட்சம் மதிப்புகளை இழந்து இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார்.
அதன்படி நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் வங்கி ஊழியர் குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்தது வேதனையை தருகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.