ஆன்லைன் சூதாட்டம்! என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மம்சாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவருக்கு 21 வயதில் வினோத்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மதுரை திருமங்கலம் அருகே பிரபல தனியார் கல்லூரியில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

டென்னிஸ்ஸில் அதிக ஆர்வம் கொண்ட வினோத்குமார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அதே சமயம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான இவர் கடந்த 2 தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் விடுதி அறை மாணவர்கள் கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததால் சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் கதவை உடைத்து பார்த்தப்போது வினோத்குமார் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதனையடுத்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவன் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பதாகவும், பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.