மாணவர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆன்லைன் தேர்வு மீண்டும் அமல் படுத்தப்பட்டது. இதனை தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இன்று காலை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
அதன்படி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி ஆன்லைன் செமஸ்டர் தேர்வு 20 லட்சத்து 875 மாணவர்கள் எழுத உள்ளனர் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். நவம்பர், டிசம்பர் மாத தேர்வு ஆன்லைனிலும் இறுதி செமஸ்டர் தேர்வு மட்டும் நேரடியாகவும் நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதேவேளையில் அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் உயர் கல்வித் துறை பொன்முடி கூறினார். நடப்பாண்டு மாணவர்கள் மட்டுமின்றி அரியர் வைத்த மாணவர்களும் குஷியில் காணப்படுகின்றனர்.