கள்ளக்குறிச்சி விவகாரம்: புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்..!!!

கடந்த ஜூன் 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கு தீ வைப்பது மற்றும் பள்ளியில் இருக்கும் பொருட்களை சூறையாடினர்.

இதனால் மீண்டும் பள்ளிகள் தொடங்குமா? என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த சூழலில் புதன்கிழமையில் இருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு புதன்கிழமையில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

அதோடு  9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அம்மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி இந்த அறிவிப்பு வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment