ஆன்லைன் வகுப்புகள்: இன்று காலை உயர் நீதிமன்றம் கொடுத்த டிப்ஸ்; பாலோ செய்யுமா பள்ளிக்கல்வித்துறை?

ஒவ்வொரு நாளும் உயர்நீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களையும் உத்தரவையும் பிறப்பித்து வரும். அந்த வரிசையில் இன்றைய தினம் காலையில் மாணவர்களுக்கான புதிய மகிழ்ச்சியான  தகவல் ஒன்றை கூறியிருந்தது.

அதன்படி தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய பகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு முறையை ரத்து செய்து மீண்டும் ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கலாம் என்று அறிவுறுத்தியிருந்தது. ஏனென்றால் நேரடி வகுப்பு முறையை ரத்து செய்வதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன் எதிரொலியாக தற்போது ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பொங்கல் விடுமுறைக்கு பின் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. உயர்நீதிமன்ற அறிவுரையை தொடர்ந்து நேரடி வகுப்பை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்பு முறையை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment