நம் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வருகிற 20-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் பகுப்பு முறையை மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி பகுப்பு முறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு முறை நடைபெறும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஏனென்றால் இந்த மூன்று வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் அவர்களுக்கு நேரடி வகுப்பு பயனுள்ளதாக அமையும் என்று கருத்தும் கூறியுள்ளது.
இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வகுப்புகள் சிறந்தது என்று கூறியுள்ளது. அதன்படி 10 11 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சிறந்தது என அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவின் 3வது அலை அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதே தவிருங்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் ஆசிரியர், மாணவ,ர் பணியாளர் ஆகியோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.