
News
உக்ரைனில் தொடர்ந்து ஒலிக்கும் எச்சரிக்கை சைரன்!!போர் பதற்றம் அதிகரிப்பு;
சுமார் 50 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் புரிந்து கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் உக்ரைனில் உள்ள பல பகுதிகளை ரசியா ஒவ்வொன்றாக கை பற்றிக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் தொடர்ந்து எச்சரிக்கை சைரன் ஒலிப்பதாக தெரிகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் வான்வழி தாக்குதல்கான எச்சரிக்கை சைரன் ஒலித்ததால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் விடியவிடிய எச்சரிக்கை சைரன் ஒலித் தாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக உக்ரைன் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. டொனெட்ஸ்க், கீவ், செர்னிகிவ், லிவிவ், ஒடேசா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் ஒரே இரவில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் பிலோஹோரிவ்கா கிராமத்தில் மக்கள் தஞ்சம் அடைந்திருந்த பள்ளியின் மீதும் ரஷ்யப் படைகள் தாக்குதல் செய்துள்ளன. பிலோஹோரிவ்கா கிராமத்தில் பள்ளி மீது ரசிகர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.
