உதகை மக்களுக்கு நற்செய்தி; இன்னும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு!

உதகையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா மேலும் 5 நாட்கள் நீட்டிக்கபடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுவரை 40 ஆயிரம் பேர் வந்து சென்ற நிலையில் 12 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ள நிலையில் 19-ந்தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது.

உதகை நகரம் கட்டமைக்கபட்டு 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கடந்த 5-ந்தேதி புத்தக திருவிழா தொடங்கபட்டது. நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த புத்தக திருவிழாவிற்கு 10 நாட்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சென்ற நிலையில் சுமார் 12 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது.

இதனிடையே உள்ளூர் மக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் புத்தகங்களை வாங்க ஆர்வத்துடன் வருவதால் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கபடுவதாக மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் அறிவித்துள்ளார். இதனால் 19-ந்தேதி மாலை வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவை நீட்டித்துள்ளதற்கு உள்ளூர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.