Connect with us

அரபிக்கடலில் ஓ.என்.ஜி.சி ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி!

flight 1

செய்திகள்

அரபிக்கடலில் ஓ.என்.ஜி.சி ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி!

ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த சில நாட்களாகவே ஹெலிகாப்டர் விபத்து என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்நிலையில் ஒ.என்.ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்பிட்டரில் 9 பேருடன் பறந்த கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.

குறிப்பாக 60 நாட்டிகல் திலைவில் நடுக்கடலில் பறந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கடற்படை, கடலோர காவல்படை உதவியுடன் மீட்பு பணி தொடங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது 5 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒ.என்.ஜிசி நிறுவன ஊழியர் 3 பேர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒ.என்.ஜி.சி நிறுவன எண்ணெய் கிணறு அருகிலேயே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top