Connect with us

ஹைட்ரோகார்பன் கிணற்றில் புதிய பணிகளுக்கு ஓஎன்ஜிசிக்கு தடை!!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Capture 10

தமிழகம்

ஹைட்ரோகார்பன் கிணற்றில் புதிய பணிகளுக்கு ஓஎன்ஜிசிக்கு தடை!!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் கிணறு அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிக அழுத்தத்தின் காரணமகா கிணறு முற்றிலுமாக மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் ஓஎன்ஜிசி நிறுவனம் மறுபடியும் சரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தாக தெரிகிறது. இதனை அறிந்த விவசாயிகள் ஹைட்ரோகார்பன் கிணறு ஏன் மீண்டும் தொடங்க வேண்டும்? என குற்றச்சாட்டு முன் வைத்தனர்.

இதனால் ஓஎன்ஜிசி நிறுவனம்  மீண்டும் ஹைட்ரோகார்பன்   எடுக்க திட்டமிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.   இதற்கு ஓஎன்ஜிசி நிறுவனமும் ஹைட்ரோகார்பன் கிணற்றை முறையாக பாதுகாக்க வேண்டும் என்று கூறினர்.

இந்த சூழலில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள  ஹைட்ரோகார்பன்  கிணற்றில் மீண்டும் புதிய பணிகள் தொடங்குவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top