ஹிந்தி, இங்கிலீஷ் தெரியாது என்பதற்காக ஒருவரின் அறிவியல் திறமையை மறுக்க இயலாது!

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி வட்டார மொழியில் கே. வி.பி.ஒய் தேர்வு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. கே.வி.பி.ஒய் தேர்வு வட்டார மொழிகளில் நடத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட் மதுரை

உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நவம்பர் 7ஆம் தேதி நடக்கும் கே.வி.பி.ஒய் தேர்வை ஒத்தி வைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கே.வி.பி.ஒய் தேர்வு அறிவியல் முனைப்பு கொண்ட மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒரு விதமான தகுதி தீர்வாகும்.

நிதி உதவி வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தகுதித் தேர்வை கண்டிப்பாக வட்டார மொழிகளில் நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் குறித்த குறியீடுகள், வார்த்தை அந்தந்த மாநில மொழியில் மொழி பெயர்ப்பது மிகவும் கடினமானது என்றும் ஒன்றிய அரசு கூறியிருந்தது.

மொழிபெயர்ப்பு கடினமாக இருப்பதால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படுகிறது என்றும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. வட்டார மொழிகளில் மொழிபெயர்க்க இயலவில்லை என்பது மாணவர்களின் குறைபாடு இல்லை என்று தலைமை நீதிபதி பதிலளித்தார்.

இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாது என்பதற்காக ஒருவரது அறிவியல் திறமையை மறுக்க இயலாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.

கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்றும் கூறுகிறது. கே.வி.பி.ஒய் திட்டத்தின்கீழ் பதினோராம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை உள்ளவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகுதி தேர்வு நடத்தி கே.வி.பி.ஒய் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment