
செய்திகள்
பகையால் அரங்கேறிய பயங்கரம்!! சினிமா பாணியில் தப்பிய குறி… தந்தைக்கு பதில் பலியான பச்சிளம் குழந்தை பலி!
திண்டுக்கல் அருகே முன் பகை காரணமாக தந்தைக்கு வைத்த குறியில் குழந்தை சிக்கியது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் முத்தனம் பட்டி அருகே உள்ளது சில்வார்பட்டி கிராமம் இக்கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி இவரது மனைவி சுமதி இவர்களுக்கு ஒன்றரை வயதில் சாதனா என்ற பெண் குழந்தை உள்ளது. பொன்னுச்சாமி பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார் இதனிடையே இதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் திமுக கிளைச் செயலாளர் ஆக உள்ளார்.
ராஜேந்திரனுக்கும் பொன்னுச்சாமிக்கும் ஏற்கனவே முன்பகை இருந்துள்ளது. இதன் காரணமாக பொன்னுச்சாமியை கொலை செய்து விடுவேன் என ராஜேந்திரன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 10.07.22 மாலை பொன்னுச்சாமி இருசக்கர வாகனத்தில் தனது குழந்தை சாதனாவுடன் சில்வார்பட்டியில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார் அப்பொழுது அந்த வழியாக காரில் வந்த ராஜேந்திரன்.
பொன்னுச்சாமி நிற்பதை பார்த்து காரை வேகமாக ஓட்டி வந்து பொன்னுச்சாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த குழந்தை சாதனா கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் குழந்தை சாதனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பகை காரணமாக தந்தையை கார் ஏற்றிக் கொள்ள முயன்றதில் குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
