News
தலைநகரில் மட்டும் ஒரு வாரம் பொதுமுடக்கம் நீட்டிப்பு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தலைநகர் திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 416 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6951 என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேரளாவில் நோய் பரவல் அதிகரித்ததன் காரணமாக குறிப்பாக திருவனந்தபுரத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் அந்நகரில் மட்டும் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் மூன்று முறை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இதுவரை 636 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதும், அதில் 202 பேர் குணமாகியுள்ளனர் என்பதும், ஐந்து பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
