கொதிகலன் வெடிப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு தடைபட்ட மின் உற்பத்தி, வெடிப்பு சரி செய்யப்பட்டு மேட்டூர் அனல் மின் நிலைய முதல் அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 1-வது அலகில் நேற்று முன்தினம் இரவு கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதின் காரணத்தால் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்
கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, முதல் பிரிவில் உள்ள 1வது அலகில் திடீரென கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பின்னர் அதனை சரி செய்யும் பணி இன்று காலை முடிவடைந்தது. இதனை அடுத்து இன்று காலை முதல் 1வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
முதல் பிரிவில் உள்ள நான்கு அலகுகளிலும் 840 மெகா வாட் மின்சாரமும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தியும் தற்போது நடைபெற்று வருகிறது.