பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்! டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் கால் வைக்குமா ஆம் ஆத்மி?

இந்தியாவில் அடுத்த மாதம் ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பஞ்சாப், மணிப்பூர், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியினரும் புதுப்புது வாக்குறுதிகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி தற்போது பஞ்சாப் மாநில மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து வருகின்றனர். அதன்படி டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதன்படி பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்குமே மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொஹாலியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதியை கூறினார்.

பஞ்சாப்பை மேம்படுத்த பத்து அம்சத் திட்டத்தை தீட்டி உள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒன்று வீதம் 16,000 மொகல்லா கிளினிக்குகள் என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment