Connect with us

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய்; வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய்!: ஆம் ஆத்மி!

1000 1

செய்திகள்

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய்; வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய்!: ஆம் ஆத்மி!

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய்; வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய்!: ஆம் ஆத்மி!

அடுத்த மாதம் இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆளும் செய்யும் ஆம் ஆத்மி கட்சி அடுத்தடுத்து ஐந்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவா மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

அதன்படி கோவா சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் கோவா மாநிலம் முழுவதும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் தலா ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கோவா சுற்றுலாத்துறை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அனைத்து கிராமங்களிலும் மருத்துவமனை கட்டப்படும் என்றும் ,வட்டாரங்களில் மொகல்லா கிளினிக்குகள் கட்டப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுபோன்ற பஞ்சாப் மாநிலத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top