அதிர்ச்சியில் அண்ணாச்சி; ஒருவார சோதனையில் வெளிவந்தது 1000 கோடி ரூபாய்!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. முதலில் அரசியல் பிரமுகரும் இல்லத்தில் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை என அனைத்து பகுதிகளிலும் வருமானவரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் சூப்பர் சரவணா ஸ்டோரின் நான்கு கடைகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல கோடிக்கும் அதிகமான வருவாய் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூபாய் 1000 கோடி வருவாய் மறைக்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது என்று வருமான வரித்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment