மது பிரியர்களே முந்துங்க ..! 8 குவாட்டர் வாங்கினால் ஒரு குவாட்டர் இலவசம்..
ஆண்டுதோறும் மாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாவீரர் ஜெயந்தியை தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனிடையே இன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் 8 குவாட்டர் வாங்கினால் ஒரு குவாட்டர் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடுமுறையினை பயன்படுத்தி விடுகாவூர் கிராமத்தில் 8 குவாட்டர் வாங்கினால் ஒரு குவாட்டர் இலவசம் என அறிவிக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது.
மாவீரர் ஜெயந்தி மதுக்கடைகளில் மதுவிற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
