Connect with us

அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த மனநல காப்பகம்!! ஒருவர் சந்தேக மரணம்;

156511 death1

தமிழகம்

அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த மனநல காப்பகம்!! ஒருவர் சந்தேக மரணம்;

தற்போது கொலை அல்லது தற்கொலை என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் அடுத்தடுத்து உயிர் இழப்புகளின் எண்ணிக்கை நிகழ்ந்து கொண்டே தான் வருகிறது.

ஒரு சில மரணங்கள் சந்தேகத்திற்கு இடமானதாகவும் காணப்படுகிறது. அந்த வகையில் மனநல காப்பகத்தில் சந்தேக மரணம் நிகழ்ந்ததாக தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சுந்தரபுரி கிராமத்தில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் சிவராஜ் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். திருச்சியை சேர்ந்த சிவராஜ் என்ற 38 வயது மதிக்கத்தக்க நபர் உடம்பில் பலத்த காயத்துடன் மனநல காப்பகத்தில் மரண அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அரசு அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகத்தில் சிவராஜின் சந்தேக மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அரசு அனுமதியின்றி மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

மனநல காப்பகத்தை நடத்தி வந்த மதுரையை சேர்ந்த ஸ்டாலின் ராஜாவிடம் போலீஸில் விசாரணை மேற்கொண்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top