உயிரை பறித்த மாண்டஸ் புயல்: கண்ணாடி விழுந்து ஒருவர் பலி!!

வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் காரணமாக காரைக்காலில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையில் வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசியது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வசிக்கும் பழனியப்பன் என்பவர் தனியார் எரிவாயு சிலிண்டரை டெலிவரி செய்து வருகிறார். அதன் படி, பர்மா காலனி அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் டெலிவரிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மாண்டஸ் புயல் எதிரொலி: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!!

அப்போது குடியிருப்பில் 3-வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி அவர் மீது விழுந்துள்ளது. இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது பழனியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

180 கி.மீ தென்கிழக்கில் மையம்… மாமல்லபுரத்தை நெருங்கும் மாண்டஸ் புயல்..!!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அடுத்தடுத்த கண்ணாடிகள் உடையில் அபாய நிலையில் இருப்பதால் தீயணைப்பு துறையினர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கண்ணாடிகளை அகற்றி புது கண்ணாடிகளை பொறுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.