மீண்டும் சோகம்! மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி என்பவர் மழை நீர் வடிகால் பள்ளத்தில் கால் தவறி விழுந்துள்ளார். அப்போது மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நான் பேசிய விஷயம் எனக்கு எதிராக மாறியது; ராஷ்மிகா மந்தனா வேதனை!

அவரது சடலத்தை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தற்போது சடலத்தை மீட்ட போலீசார் அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளில் உரிய பாதுகாப்பின்றி நடைபெறுவதால் இத்தகைய அசம்பாவிதங்கள் நடைப்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில்..!!

மேலும், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது இத்தகைய அசம்பாவிதம் நடைப்பெற்று இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment