பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்!!

இங்கிலாந்து நாட்டில் உலக காமன்வெல்த் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது ஆபாரத்தை காட்டிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் தினம் தோறும் இந்தியாவிற்கு பதக்கங்கள் உறுதி என்பது போல் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் செயல்பட்டு கொண்டு வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக பளு தூக்குதல் பிரிவில் கலந்து கொண்டுள்ள அனைவரும் தங்கப்பதக்கம் அல்லது வெள்ளி பதக்கம் வென்றுதான் நாட்டிற்கு திரும்பவும் என்ற குறிக்கோளோடு சென்றுள்ளது போல் காணப்படுகிறது.

ஏனென்றால் இந்தியாவிற்கு எந்த ஒரு காமன்வெல்த் போட்டியில் இல்லாத வகையில் தற்போதைய காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் அதிகளவு பதக்கங்கள் கிடைத்துக் கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் மற்றுமொரு வீரர் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். அதன்படி காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

96 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாகூர் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மொத்தம் 346 கிலோ எடை தூக்கி போட்டியில் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார். இதுவரை காமன்வெல்த் போட்டியில் இந்தியா 12 பதக்கங்களை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஐந்து தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் அடங்கும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.