Connect with us

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை-பாதிப்பு எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு!!

செய்திகள்

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை-பாதிப்பு எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு!!

உலகையே கொரோனா பாதிப்பு ஆண்டு கொண்டு வருகிறது என்றே கூறலாம். ஏனென்றால் நாள்தோறும் கொரோனாவின் பாதிப்பு உலக அளவில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் கொரோனாவின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில காலமாக குரங்கு அம்மை என்று அழைக்கப்படுகின்ற மங்கி பாக்ஸ் நோய் அதிகளவு பரப்பப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் மங்கி பாக்ஸ் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இவை இந்தியாவிலும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டெல்லியில் 31 வயது உடைய நைஜீரியா நாட்டில் சேர்ந்த பெண்ணுக்கு குரங்கமை நோய் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் இதுவரை 9 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் கிடைத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top