தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளித்த பள்ளிக்கல்வித்துறை!

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்பதும் அதற்கு அடுத்த நாள் அரசு விடுமுறை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து நவம்பர் 5ம் தேதியும் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி பள்ளிகள் விடுமுறை என சற்று முன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நவம்பர் 4 அன்று விடுமுறை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வெளியூர் சென்றிருக்கும் காரணத்தினால் நவம்பர் 6ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த பள்ளிக்கல்வித்துறை நவம்பர் 6ஆம் தேதி விடுமுறை அறிவித்து உள்ளது

எனவே நவம்பர் 4 முதல் 7ம் தேதி வரை நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை என்பது மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment