மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு?

வங்கக்கடலில் கடந்த இரண்டு வாரங்களாக 2 காற்றழுத்த தாழ்வு மையங்கள் தோன்றியது என்பதும், அது காற்றழுத்த மண்டலமாக மாறியது என்பதும் இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக காற்றழுத்த தாழ்வு தோன்றி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வங்கக்கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு இன்னும் 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்றும் அதன் பின் தெற்கு நோக்கி நகர்ந்து தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் இலங்கையை நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் வட மாவட்டங்களில் இந்த காற்றழுத்த தாழ்வினால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment