மீண்டும் சோகம்! ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர்பலி!

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த இளைஞர் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதிலும் ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் தகவல்!

இந்நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்துள்ள ஸ்ரீரெகுநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் சிவன்ராஜ் (வயது34). பட்டதாரி இளைஞரான இவர் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் ஆன்லைன் ரம்மியை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் சிறிதளவு பணம் வந்ததால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களிடன் கடன் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் விளையாடியதில் சுமார் ரூ.15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.

‘தமிழ்நாடு போதைப்பொருள் சந்தைகளம்’- இபிஎஸ் குற்றச்சாட்டு!!

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிவன்ராஜ் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை
குளிர்பானம் கலந்து குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.