அதிர்ச்சி! தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!!

சீனாவிலிருந்து வந்த கோவையைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவின் தாயகமாக கருதப்படும் சீனாவில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சூடுபிடிக்கும் விசாரணை; கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்!!

அதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான நிலையத்தில் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 9 சர்வதேச விமான நிலையங்களில் 1,357 பயணிகள் தமிழகம் வந்தடைந்துள்ள்னர்.

இவர்களில் ரேண்டம் முறையில் 64 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கோவையை சேர்ந்தவருக்கு கொரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு பீர் பாட்டிலுக்கு 20 ரூபாயா? – அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

இதனிடையே உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவரை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிலிருந்த வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.