Connect with us

550 ரூபாய்க்கு விற்பனையாகும் ‘பெட்ரோல்’-மீண்டும் விலை உயர்வு!!

petrol bunk2

செய்திகள்

550 ரூபாய்க்கு விற்பனையாகும் ‘பெட்ரோல்’-மீண்டும் விலை உயர்வு!!

உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு சிக்கிக் கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சமாகும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

ஒருசில மக்கள் இலங்கையில் அரசுக்கு எதிராக தீவிர கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் உள்ள பெரும்பாலான நகரங்களில் கலவரம் வெடித்தது. மேலும் அங்கு அத்தியாவசிய பொருட்களின் தேவை மற்றும் விலையும் அதிகரித்தது.

மேலும் எரிபொருளான பெட்ரோல் டீசல் விலை 300, 400 ரூபாயைத் தாண்டி விற்பனையானது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது .

அதன்படி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி டீசல் விலையை 15 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் பெட்ரோல் விலையை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மீண்டும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விலை உயர்வை அடுத்து இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 550 க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 460 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top