அச்சுவெல்ல விவசாயிகளே….! தரமான அச்சுவெல்லம் தயாரிக்க ‘ஒரு லட்சம்’!!
தமிழகத்தில் பல இடங்களில் அச்சுவெல்லம் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. பல விற்பனையாளர்கள் ஒரிஜினல் அச்சுவெல்லம் என்று கூறி தரமற்ற மற்றும் போலியான அச்சுவெல்லங்களை விற்பனை செய்து கொண்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கூடிய சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த வேளாண் பட்ஜெட்டில் அச்சுவெல்லம் பற்றி ஏதேனும் அறிவிக்கப்படலாம் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தரமான அச்சு வெல்லம் தயாரிக்க நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.. அதன்படி தரமான அச்சுவெல்லம் தயாரிக்க முதல்கட்டமாக 100 விவசாயிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும் இரண்டு இடங்களில் பூச்சிக்கொல்லி ஆய்வு மையம் அமைய உள்ளதாகவும் கூறினார். அதன்படி சென்னை மற்றும் திருச்சியில் பூச்சிக்கொல்லி அளவை அறிந்து கொள்ளும் வகையில் ரூபாய் 15 கோடியில் ஆய்வு மையங்கள் அமைய உள்ளதாகவும் அவர் கூறினார். பூச்சி மற்றும் நோய் மேலாண்மை சிறப்பு நிதியாக 5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறினார்.
