Connect with us

வேளாண் தொழில் தொடங்கும் இளையோருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி!!

விவசாயிகள்

Tamil Nadu

வேளாண் தொழில் தொடங்கும் இளையோருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி!!

வேளாண் தொழில் தொடங்கும் இளையோருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி!!

என்னதான் பல்வேறு கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டாலும் மனிதனின் பசி ஆற்றுவது என்பது விவசாயிகளின் விவசாயம்தான். இதனால் படித்த இளைஞர்கள் கூட தற்போது களப்பணியாற்ற வேண்டும் என்ற முயற்சியில் விவசாயத்தில் இறங்குகின்றனர்.

அவர்களுக்கு அரசின் சார்பில் ஏதேனும் உதவி கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தனர். அந்த வகையில் இன்றைய தினம் தமிழகத்தில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

இந்த பட்ஜெட் முழுவதும் வேளாண் துறைக்கான பட்ஜெட்டாக காணப்படுகிறது. இதனை வேளாண்துறை அமைச்சர் பல்வேறு வேளாண் சார்ந்த பிரிவுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீட்டினை அறிவித்தார்.

அதில் புதிதாக விவசாய தொழில் செய்யும் இளைஞர்களுக்கு நிதி உதவியையும் அறிவித்தார். அதன்படி இளையோர் வேளாண் தொழில் தொடங்க அவர்களுக்கு நிதி உதவியாக ரூபாய் ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று கூறினார்.

அதோடு மட்டுமில்லாமல் இளைஞர்கள் பலரும் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாகிக் கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக விவசாயத்தை எளிமைப்படுத்த வகையில் பல கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செல்போன் மூலம் மோட்டார்களை இயக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. செல்போன்கள் மூலம் மோட்டாரை இயக்கும் நுட்பத்தை விவசாயிகள் பெரும் வகையில் ரூ 1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top