ஒன்னு ஒரு ரூபாய்… அலைமோதும் கூட்டம்… என்னனு தெரியுமா?

மழைக்காலங்களில் மட்டுமே வெளிவரும் உயிரினங்களில் ஒன்று தான் ஆப்பிரிக்க நத்தை. இது பார்ப்பதற்கு வேண்டுமானால் உருவத்தில் சிறியதாக இருக்கும். ஆனால் இது ஏற்படுத்தும் விளைவு மிகவும் பெரியது என்றால் நம்ப முடியுமா? ஆமாங்க உலக அளவில் மிகவும் ஆபத்தான, அதிவேகமாக ஆக்கிரமிப்பு செய்யும் உயிரினங்களில் இந்த ஆப்பிரிக்க நத்தைகள் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றன.

அப்படி என்ன ஆபத்துனு தான கேட்கறீங்க. இவைகளால் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. ஆனால் விவசாயத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். மரம், செடி, கொடி அவ்வளவு ஏன் காண்க்ரீட் சுவர்களை கூட ஆக்கிரமிக்கும் அளவிற்கு இந்த நத்தை அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்திலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஒருவரால் இந்தியாவிற்கு காட்சிப்பொருளாக கொண்டு வரப்பட்ட இந்த நத்தை தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடாக மற்றும் மத்திய பிரதேசத்தில் அதிகமாக காணப்படுகிறது. அதுமட்டும் இல்லைங்க இந்த நத்தைகள் ஒரே சமயத்தில் 200 முதல் 900 முட்டைகள் வரை இடும். இதில் ஏறக்குறைய அனைத்துமே குஞ்சுகளாக வெளிவந்துவிடுமாம்.

இந்த வகை நத்தைகளை அழிப்பது மிகவும் கடினமாம். எனவே இந்த நத்தைகளை மனித உழைப்பில் சேகரித்து அழிப்பதே சிறந்தது என்பதால் கேரளாவில் ஒரு வினோத முயற்சியை கையாண்டு வருகிறார்கள். அதன்படி சன்ரைஸ் என்ற குழுவினர் கேரளாவில் பொது இடங்களில் உள்ள நத்தைகளை சேகரித்து அழித்து வருகிறார்கள். ஆனால் தனியார் இடங்களில் உள்ள நத்தைகளை சேகரிப்பதில் சிரம்ம ஏற்பட்டுள்ளது.

அதனால் ஒரு நத்தை ஒரு ரூபாய் என்ற வாசகத்துடன் போன் நம்பர்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சன்ரைஸ் குழுவினரின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறதாம். கேரளாவில் நத்தைகளுடன் கூட்டம் அலைமோதி உள்ளது. ஒரே வாரத்தில் 3500 நத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரே வீட்டிலிருந்து மட்டும் 600 நத்தைகள் பிடிக்கப்பட்டன என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். சன்ரைஸ் குழுவினரின் இந்த முயற்சிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment