Connect with us

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாயா? உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் விசிட்;

கோயம்பேடு

தமிழகம்

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாயா? உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் விசிட்;

நம் தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறி மார்க்கெட் என்றால் அனைவரும் முதலில் கூறுவது சென்னை கோயம்பேடு மார்க்கெட் தான். இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோடை விளைச்சல் குறைந்து வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.

அதன்படி மூன்று வாரங்களுக்கு முன்பு கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வரை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் இன்றைய சென்னை கோயம்பேடு சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் இருந்து கொண்டுவரப்பட்ட மாம்பழங்கள், அவகேடோ பழங்கள் எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைக்க பட்டதாக தெரிகிறது.

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top