தொடர்மழையின் எதிரொலி உச்சத்தில் காய்கறி விலை! ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்!!

தற்போது தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் வெள்ள நீரால் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர்.

கோயம்பேடு

இந்த நிலையில் தற்போது சென்னை கோயம்பேட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென்று உயர்ந்து உள்ளது. ஏனென்றால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தொடர் கன மழையால் பயிர்கள் சேதம் போன்றவற்றால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து கணிசமாக குறைந்து காணப்பட்டன.

ஆனால் நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில அதிரடி அறிவிப்புகளை கூறியிருந்தார். அவற்றுள் ஒன்று வெளியூர் மக்கள் யாரும் மூன்று நாட்களுக்கு சென்னைக்கு வர வேண்டாம்.

இதனால் சென்னையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வாகனங்கள் வரத்து குறைந்துள்ளதும் காய்கறிகளின் விலை உயர்வுக்கு அதிக காரணமாக காணப்படுகிறது.

அதன்படி சென்னை கோயம்பேட்டில் தற்போது ஒரு கிலோ தக்காளியானது 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.இதுபோன்று சென்னையில் இதர காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment