Connect with us

அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி! ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) 84 ரூபாய்.!!

broiler

தமிழகம்

அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி! ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) 84 ரூபாய்.!!

நம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஏதேனும் ஒரு சிறப்பு வாங்கித் தொழிலை பெற்று இருக்கும். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் முட்டை பண்ணை மற்றும் கோழி பண்ணை என்று அழைக்கப்படும் மாவட்டமாக காணப்படுகிறது நாமக்கல்.

ஏனென்றால் இந்த மாவட்டத்தில் இருந்து தான் அனைத்து மாவட்டங்களுக்கும் முட்டை மற்றும் கறிக்கோழிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே இங்கு எப்பொழுதும் முட்டை விலை ஆனது ஐந்து ரூபாய்க்கு கீழே தான் விற்கப்படும்.

ஆயினும் கூட ஒரு சில நாட்களுக்கு முன்பு ஐந்து ரூபாய்க்கும் தாண்டி விற்பனையானது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் முட்டை என்பது அத்தியாவசிய பொருளாக காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ஆனது 4.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அங்கு ஒரு கிலோ கறிக்கோழி உயிருடன் 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் 8 ரூபாய் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னையில் ஒரு முட்டை ரூபாய் 4.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top